செய்திகள்

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.40 லட்சம் நிவாரண பொருட்கள்- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2018-12-01 14:09 GMT   |   Update On 2018-12-01 14:09 GMT
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று அனுப்பி வைத்தார். #ADMK #kadamburRaju
மதுரை:

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை உலுக்கி எடுத்த கஜா புயல் பாதிப்புக்கு புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வீடு மற்றும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் பணியாற்றி வருகிறது.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக உணவு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர்ராஜூ ரூ. 40 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சேகரித்து 5 வாகனங்களில் இன்று தஞ்சை மற்றும் திருவாருர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், நிர்வாகிகள் சோலைராஜா, பரவை ராஜா, முத்துராமலிங்கம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பிரிட்டோ, தமிழ்செல்வன், அரவிந்தன், ஜெயரீகன், கே.வி.கே. கண்ணன், பார்த்திபன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #KadamburRaju
Tags:    

Similar News