செய்திகள்
சப்பாத்திகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்ததை படத்தில் காணலாம்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்து அனுப்பிய இளைஞர்கள்

Published On 2018-11-25 10:22 GMT   |   Update On 2018-11-25 10:22 GMT
புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், நாகை, புதுக்கோட்டை மாவட்ட கிராமப்பகுதி மக்களுக்காக 10 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்து இளைஞர்கள் வேன் மூலம் அனுப்பி வைத்தனர். #GajaCyclone
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்க 10 ஆயிரம் சப்பாத்திகள் தயாரிக்கும் பணி நம்பியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோசணம், மலையப்பாளையம், சாவக்கட்டுபாளையம், வேமாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு சப்பாத்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற பணியில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டு சப்பாத்திகளை தயார் செய்தனர்.

மேலும் நம்பியூர் வட்டார பொதுமக்கள் உதவியுடன் கஜா புயல் சேதப்பகுதிக்களான வேதாரண்யம், நாகை, புதுக்கோட்டை உள்பட மாவட்ட கிராம பகுதி மக்களுக்கு அரிசி, ரொட்டி, தண்ணீர் பாட்டில், குழந்தைகளுக்கு பால் பவுடர், பிஸ்கட், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் அனைத்தும் வேன் மூலம் சென்று விநியோகம் செய்யப்பட்டது. #GajaCyclone



Tags:    

Similar News