செய்திகள்

துரைப்பாக்கத்தில் 7-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

Published On 2018-10-23 12:10 IST   |   Update On 2018-10-23 12:10:00 IST
துரைப்பாக்கத்தில் ஏ.சி.யை பழுது பார்த்தபோது 7-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சோழிங்கநல்லூர்:

துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்னை ஒன் ஐடி நிறுவனம் உள்ளது. இங்கு 7-வது மாடியில் ஏ.சி.யை பழுது பார்த்து புதியதாக மாற்றும் வேலை நடந்தது.

துரைபாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் உள்பட 4 பேர் ஏ.சி. பொருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 7-வது மாடியில் இருந்து பிரகாஷ் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News