செய்திகள்

தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டம் சரியாக இல்லை- ஜிகே மணி

Published On 2018-08-25 04:04 GMT   |   Update On 2018-08-25 04:04 GMT
தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டம் சரியாக செயல்படுத்தாமல் இருப்பது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். #PMK #GKMani #Mukkombu
திருச்சி:

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்டை மாநிலங்களில் நீர் மேலாண்மை மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் நீர் மேலாண்மை சரியாக செயல்படுத்தாமல் இருப்பது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. அதனால், கொள்ளிடத்தில் தண்ணீர் பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக செல்கிறது. கொள்ளிடம் அணை இடிந்ததற்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம். மற்ற மாநிலங்களில் விவசாய பரப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் குறிப்பிட்ட அளவு மணல் அள்ளுவதற்கு பதிலாக 40 அடிக்கும் மேலாக பள்ளம் தோண்டி மணல் அள்ளுகின்றனர். நாளைய சந்ததியினருக்கு ஊற்றுநீர் கூட கிடைக்காத நிலை உள்ளது. முக்கொம்பில் புதிய அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது. ஆனால் கட்டப்படும் புதிய அணை பல வருடங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #PMK #GKMani #Mukkombu
Tags:    

Similar News