செய்திகள்

கனமழையால் தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2018-08-16 03:21 GMT   |   Update On 2018-08-16 03:21 GMT
கனமழை பெய்து வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. #HeavyRain #HolidayForSchools
தேனி:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், வி.கே.புதூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.  #HeavyRain #HolidayForSchools

Tags:    

Similar News