செய்திகள்

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் - திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பில்லை

Published On 2018-08-07 06:16 GMT   |   Update On 2018-08-07 06:16 GMT
தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை. #MotorVehicleStrike, MotorVehicleAmendmentBill,

திண்டுக்கல்:

மோட்டார் வாகன வரைவு சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

இதில் அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்கள், ஆட்டோ, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் பங்கேற்கப் போவதாக அறிவித்தனர். திண்டுக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்ட பகுதியில் 922 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 5400 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ள போதும் வழக்கமாக பஸ்கள் இயங்கின.

இது குறித்து போக்குவரத் துக்கழக அதிகாரிகள் தெரிவிக்கையில், 1700 பேர் பணிக்கு வந்தாலே அனைத்து பஸ்களையும் இயக்க முடியும். இதனால் ஒரு நாள் வேலை நிறுத்தபோராட்டம் என்பது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

திண்டுக்கல் மண்டலத்தில் வழக்கமான பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பஸ்களும் வழக்கமாக செல்கிறது என்று தெரிவித்தார். ஆனால் போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆட்டோ தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கை விளக்க அட்டையை ஆட்டோவில் ஒட்டி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதேபோல வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வந்த டூரிஸ்ட் வாகனங்களும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒர்க்ஷாப்கள், ஆட்டோ உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், மோட்டார் வாகன அலுவலக பணியாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News