கிரிக்கெட் (Cricket)

வருண் சக்ரவர்த்தியா? குல்திப் யாதவா?- பெரிய தலைவலி என்கிறார் சூர்யகுமார் யாதவ்

Published On 2026-02-06 17:04 IST   |   Update On 2026-02-06 17:04:00 IST
  • வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகிய இரண்டு தலைசிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர்.
  • இருவரும் ஆடும் லெவனில் இடம் பெறுவார்களா? என்பது சந்தேகம்தான்.

டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நாளை முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை வெல்ல இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக இந்திய அணி தங்களை தயார்படுத்தியது.

பேட்டிங், வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்குகிறது. நாளை டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கும் நிலையில், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

சிறந்த பந்து வீச்சாளர்களை பெற்றிருப்பது கூடுதல் நன்மை. அதேவேளையில், எந்தவொரு எதிரணியை எதிர்த்து நாம் விளையாட இருக்கிறோம். அதற்கான காம்பினேசனை பார்க்க வேண்டும்.

நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அல்லது இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களுடன் விளையாடுவது அவசியம் என்றால், அவர்கள் இருவரும் அணியில் விளையாடுவார்கள்.

ஆனால், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் போன்ற உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இருவரைக் கொண்டிருப்பது எப்போதுமே நல்லது. ஆனால் யாரை தேர்வு செய்வது என்பதில் தலைவலி ஏற்படும்.

இவ்வாறு சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதில அக்சர் படேல் ஆல்-ரவுண்டர் ஆவார். இதனால் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோரில் ஒருவர்தான் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News