செய்திகள்

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதில் உள்நோக்கமும் கிடையாது- அமைச்சர் காமராஜ் பேட்டி

Published On 2018-08-05 13:43 GMT   |   Update On 2018-08-05 13:43 GMT
சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிலைகளை பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #statuesmugglingcase #ministerkamaraj #cbi

திருவாரூர்:

திருவாரூரில் அமைச்சர் இரா.காமராஜ் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டுறவு துறை ஊழியர்கள் அரசின் கோரிக்கையை ஏற்று வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிலைகளை பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது. சிலை கடத்தல் வழக்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்கள், நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரித்தால் தான் சரியாக இருக்கும். அதன் அடிப்படையில் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

சம்பா சாகுபடி மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் அனைத்தும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார். #statuesmugglingcase #ministerkamaraj #cbi

Tags:    

Similar News