செய்திகள்

சென்னையில் மேலும் 2 சிறுமிகளுக்கு செக்ஸ் தொல்லை- போஸ்கோ சட்டத்தில் வாலிபர்கள் கைது

Published On 2018-07-23 15:30 IST   |   Update On 2018-07-23 15:30:00 IST
சென்னையில் மேலும் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போஸ்கோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில கடந்த வாரம் 13 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அந்த குடியிருப்பின் காவலாளிகள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டப்பிரிவின் கீழ் 17 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் போலீசார் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் மேலும் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெசன்ட்நகர், கொடுங்கையூர், பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் அடுத்தடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

பெசன்ட்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள பிரபலமான சி.பி.எஸ்.இ. பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்ற வாலிபர் சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார். பின்னர் அங்குள்ள சிறிய சந்துக்குள் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற ரவீசந்திரன் தகாத முறையில் நடந்து கொண்டார்.

இதனை அந்த பகுதி மக்கள் பார்த்துவிட்டனர். வாலிபரின் செயலை நேரில் கண்ட அவர்கள் ஒன்று திரண்டு செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட ரவீந்திரனை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர்.

பின்னர் சாஸ்திரி நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவர் கைது செய்யப்பட்டார்.

கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஜெயவேல் என்பவரது 11 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் வெளிமாநிலத்தை சேர்ந்த கோவிந்தகுமார் என்ற வாலிபர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அவரையும் பொது மக்கள் மடக்கி பிடித்து கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். கோவிந்தகுமாரும் கைது செய்யப்பட்டார்.

கைதான 2 வாலிபர்கள் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
Tags:    

Similar News