செய்திகள்

திருவள்ளூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள்-சிறுவர்கள் போராட்டம்

Published On 2018-06-10 08:13 GMT   |   Update On 2018-06-10 08:13 GMT
பெண்கள், சிறுவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டனர். அவர்கள் கையில் கறுப்புக்கொடி ஏந்தியபடி மதுக்கடையை உடனே மூடக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். #Tasmac

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பத்தில் அரசு மதுக்கடை நேற்று முன்தினம் மாலை எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திறக்கப்பட்டது.

பெரியகுப்பதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்த பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டதால் மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். திறக்கப்பட்ட மதுக்கடையை மூடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு கடையை ஊழியர்கள் திறக்கவில்லை. இந்த நிலையில் மாலை 4 மணிக்கு மேல் கடையை திறந்து விற்பனை செய்துள்ளனர்.

இதையறிந்த அப்பகுதி பெண்கள், சிறுவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டனர். அவர்கள் கையில் கறுப்புக்கொடி ஏந்தியபடி மதுக்கடையை உடனே மூடக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

வட்டாட்சியர் தமிழ் செல்வன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். #Tasmac

Tags:    

Similar News