செய்திகள்
கொள்ளைபோன ஐம்பொன் சிலை.

ஊத்துக்கோட்டை அருகே அக்னீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலை கொள்ளை

Published On 2018-05-31 12:26 IST   |   Update On 2018-05-31 12:26:00 IST
ஊத்துக்கோட்டை அருகே உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் இருந்து ஐம்பொன் சிலை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெய்வேலி கிராமத்தில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து இருந்தது.

நேற்று காலை பூஜை முடிந்த பின்னர் பூஜாரி ராம மூர்த்தி கோவிலை பூட்டிச் சென்றார். பின்னர் மாலையில் வந்தபோது கோவில் கதவு பூட்டுஉடைந்து கிடந்தது.

மேலும் அங்கிருந்த உண்டியலும் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது சுமார் 1½ அடி உயரமுள்ள சிவன்-பார்வதி ஐம்பொன் சிலை மற்றும் குத்துவிளக்குகள், பூஜை பொருட்களை காணவில்லை. அவற்றை கொள்ளை கும்பல் சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது. ஐம்பொன் சிலையின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும். உண்டியலில் ரூ. 10 ஆயிரத்துக்கும் மேல் இருந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News