செய்திகள்

குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2018-05-18 05:22 GMT   |   Update On 2018-05-18 07:22 GMT
குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது. #GutkaScam #CBI
புதுடெல்லி:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் குட்கா நிறுவனம் மூலம் லாபம் பெற்றதாகவும். எனவே இந்த வழக்கை அதை சி.பி.ஐ. விசாரிக்க பவேண்டும் என திமுக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர். ஆனால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவக்குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். அவரது மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பாலி நாரிமன், கவில்ன்கர், சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று கூறி சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
Tags:    

Similar News