தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் நாம் தமிழர் கட்சி கொடியை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றி வைத்த காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்: தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசனை

Published On 2023-08-31 12:48 IST   |   Update On 2023-08-31 12:48:00 IST
  • கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
  • தற்சார்பு பொருளாதாரம் குறித்து மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடக்கிறது.

திருப்பூர்:

நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்பூர் வருகை தந்தார்.

காலை 9 மணிக்கு திருப்பூர் கே.செட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் கட்சி கொடியேற்றி வைத்தார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்னா ஜே.மனோகர், திருப்பூர் மண்டல செயலாளர் வான்மதி வேலுச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் தாராபுரம் சென்ற அவர், அங்கு நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு பல்லடத்தில் தனியார் நிறுவனத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசுகிறார்.

இன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் யூனியன் மில்ரோடு ஸ்ரீசக்தி தியேட்டர் அருகில் தற்சார்பு பொருளாதாரம் குறித்து மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடக்கிறது. இதில் அவர் சிறப்புரையாற்றுகிறார்.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம் திருப்பூர் நடராஜா தியேட்டர் அருகே உள்ள தெற்கு ரோட்டரி மகாலில் நடக்கிறது. இதில் சீமான் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Tags:    

Similar News