டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி
- தகுதி சுற்று ஆட்டத்தின் முதல் சுற்றில் சுமித் நாகல் அமெரிக்க வீரரை எளிதில் வீழ்த்தினார்.
- இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஆஸ்திரியா வீரரை சுமித் நாகல் எதிர் கொண்டார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 25-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகிறது.
இதன் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 170-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் மிட்செல் குருகரை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னும் 2 வெற்றி பெற்றால் அவர் பிரதான சுற்றை எட்ட முடியும் என்ற நிலையில் இன்று ஜூரிச் ரோடியானோவை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் 2-6, 4-6 என்ற கணக்கில் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.