டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சின்னர்

Published On 2025-07-11 23:35 IST   |   Update On 2025-07-11 23:35:00 IST
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
  • அரையிறுதி சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 6 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் உடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், அல்காரசை சந்திக்கிறார்.

Tags:    

Similar News