டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

Published On 2025-04-22 20:41 IST   |   Update On 2025-04-22 20:41:00 IST
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
  • ஜப்பானின் ஒசாகா முதல் சுற்றில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலியின் லூசியா பிரான்செட்டி உடன் மோதினார்.

இதில் 6-4 என முதல் செட்டை லூசியாவும், 6-2 என இரண்டாவது செட்டை நவோமி ஒசாகாவும் வென்றனர்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லூசியா 6-4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பான் வீராங்கனை ஒசாகா முதல் சுற்றில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News