டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2வது தகுதிச்சுற்றில் சுமித் நாகல் தோல்வி
- ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவில் நடந்து வருகிறது.
- 2வது தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
செங்டு:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவின் செங்டு நகரில் நவம்பர் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல்,
சீனாவின் யுங்சாகேட் பு உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சீன வீரர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.