டென்னிஸ் ஆடவர் தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த லாரன்சோ முசெட்டி
- ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது.
- ஸ்பெயின் வீரர் அல்காரஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.
லண்டன்:
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது.
அதன்படி, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 12,050 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 11,500 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 5,105 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4,780 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.
இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி 4,105 புள்ளிகளுடன் 2 நிலைகள் உயர்ந்து 5ம் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டிமினார் 6வது இடத்தில் தொடர்கிறார். கனடா வீரர் பெலிக்ஸ் அகர் அலிஸியாமே 2 நிலை சரிந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பென் ஷெல்டன், டெய்லர் பிரிட்ஸ், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் புப்லிக் ஆகியோர் 8,9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளனர்.