டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மெடிசன் கீஸ், இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2025-04-29 19:31 IST   |   Update On 2025-04-29 19:31:00 IST
  • பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் மெடிசன் கீஸ் மற்றும் டோனா வெக்கிச் மோதினர்.
  • மற்றொரு ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் மற்றும் டயானா ஷ்னைடர் மோதினர்.

களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் கீஸ் மற்றும் குரோஷிய வீராங்கனை டோனா வெக்கிச் மோதினர்.

இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் கீஸ் 6-2, 6-3 என்ற கணக்கில் குரோஷிய வீராங்கனையை எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் ரஷ்ய வீராங்கனை டயானா ஷ்னைடர் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்வியாடெக் 6-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

இதனையடுத்து 2-வது ஆட்டம் பரபரப்பாக சென்றது. இறுதியில் டயானா 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

யார் வெற்றியாளர் என தீர்மானிக்கும் 3-வது செட்டை ஸ்வியாடெக் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 6-0, 3-7, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

காலிறுதியில் ஸ்வியாடெக் மற்றும் மேடிசன் கீஸ் கீஸ் மோதவுள்ளனர்.

Tags:    

Similar News