டென்னிஸ்

மூன்று மாத தடைக்கு பிறகு இத்தாலி ஓபனில் களமிறங்குறார் சின்னர்

Published On 2025-05-07 03:00 IST   |   Update On 2025-05-07 03:00:00 IST
  • இத்தாலியின் ஜானிக் சின்னர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.
  • மூன்று மாத தடையை ஜானிக் சின்னர் ஏற்றுக் கொண்டார்.

ரோம்:

இத்தாலி டென்னிஸ் வீரரான ஜானிக் சின்னர் (23), ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் தொடர்ந்து 2-வது முறையாக கோப்பை வென்றார்.

நம்பர் 1 வீரரான இவரிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊக்கமருந்து சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட மருந்து உடலில் கலந்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சின்னரின் விளக்கத்தை சர்வதேச டென்னிஸ் ஏஜென்சி ஏற்றுக்கொண்டது.

சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ.) ஒரு ஆண்டு தடை விதிக்க கோரி சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. அடுத்து நடந்த சமரச முயற்சியில், சின்னர் 3 மாத தடையை ஏற்றுக்கொண்டார். ஜோகோவிச், செரினா வில்லியம்ஸ் உள்ளிட்ட டென்னிஸ் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ரோமில் தொடங்கும் டென்னிஸ் தொடரில் ஜானிக் சின்னர் மீண்டும் களமிறங்குகிறார். முதல் சுற்றில் இவருக்கு 'பை' வழங்கப்பட்டது. நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்க உள்ளார். இதற்கான பயிற்சியை சின்னர் தொடங்கினார்.

Tags:    

Similar News