டென்னிஸ்
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச்சை வெளியேற்றிய சிலி வீரர்
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய டபிலோ 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜோகோவிச் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.