டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தினார் கோகோ காப்
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- அமெரிக்க வீராங்கனை கோகோ காப் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால் இகா ஸ்வியாடெக் தொடரில் இருந்து வெளியேறினார்.