விளையாட்டு

அந்த மனசு தான் சார் கடவுள்.. ரஷித் கான் செயலால் நெகிழ்ந்த ஆப்கன் மக்கள்

Published On 2023-10-09 15:54 GMT   |   Update On 2023-10-09 15:54 GMT
  • நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
  • ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவானது.

இதன் தொடர்ச்சியாக 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமானது. அதில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலேயே மண்ணோடு மண்ணாக இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள். நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான், உலகக் கோப்பை போட்டியில் வாங்கும் சம்பளத்தை தனது நாட்டு மக்களுக்கு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

உலகக் கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் வங்காளதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியை தழுவியது. இதை அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி அக்டோபர் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News