விளையாட்டு

SIR குளறுபடி: முகம்மது ஷமி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் சம்மன்!

Published On 2026-01-06 17:03 IST   |   Update On 2026-01-06 17:03:00 IST
  • முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
  • விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருவதால், குறிப்பிட்ட தேதியில் ஆஜராக இயலாது

இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகம்மது கைப் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறையின் ஒரு பகுதியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

மேற்குவங்கத்தில் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் 'வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின்' போது, முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, 'புரோஜனி மேப்பிங்' மற்றும் 'செல்ஃப் மேப்பிங்' விவரங்களில் தவறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கொல்கத்தாவின் ராஷ்பெஹாரி தொகுதியின் கீழ் வரும் வார்டு எண் 93-ல் ஷமி ஒரு வாக்காளராகப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்காக, ஜனவரி 5, 2026 அன்று ஆஜராகுமாறு அவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ராஜ்கோட்டில் நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருவதால், குறிப்பிட்ட தேதியில் ஆஜராக இயலாது என ஷமி தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

ஷமியின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் ஆணையம் இந்த விசாரணையை வரும் ஜனவரி 9 முதல் 11 வரையிலான தேதிகளுக்கு மாற்றியமைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் பிறந்த போதிலும், ஷமி பல ஆண்டுகளாக கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

Tags:    

Similar News