விளையாட்டு

கொரியா ஓபன் பேட்மிண்டன் - சாத்விக், சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது

Published On 2023-07-21 12:19 GMT   |   Update On 2023-07-21 12:19 GMT
  • கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.
  • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

யோசு:

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-14, 21-17 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டகுரோ ஹோகி, யூகோ கொபாயஷி இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்திய ஜோடி, ஜப்பான் ஜோடியை எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News