விளையாட்டு
null
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
- காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதினார்.
- முதல் செட்டை பிவி சிந்து 21-11 என கைப்பற்றினார்.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பிவி சிந்து 21-11 என கைப்பற்றினார். அடுத்த செட் விளையாடுவதற்கு முன்பு காயம் காரணமாக ஜப்பானின் யமாகுச்சி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பிவி சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.