விளையாட்டு

புரோ கபடி லீக்: புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது புனேரி பல்தான்

Published On 2025-10-03 04:32 IST   |   Update On 2025-10-03 04:32:00 IST
  • 12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.
  • நேற்று நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது.

சென்னை:

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த போட்டியில் புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ் இடையிலான ஆட்டம் 29-29 என சமனில் முடிந்தது. தொடர்ந்து

நடந்த டை பிரேக்கரில் புனேரி பல்தான் 6-4 என வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் புனேரி பல்தான் அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. தபாங் டெல்லி 2-வது இடத்திலும், தெலுகு டைட்டன்ஸ் 3-வது இடத்திலும் உள்ளது.

Tags:    

Similar News