விளையாட்டு

ரேபிட் செஸ் போட்டி: உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி

Published On 2025-07-17 11:01 IST   |   Update On 2025-07-17 11:01:00 IST
  • ரேபிட் செஸ் போட்டியின் 4வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
  • ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தினார்.

உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியின் 4வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

இதன்மூலம் ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தினார். 

Tags:    

Similar News