ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
கால்பந்து ஆண்கள் குரூப் சுற்றில் இந்தியா- மியான்மர் இடையேயான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் 2-ன் 4வது போட்டியில் சீனாவின் ஹு டின் மெர்கோவை 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் சுமித் நகல் அபார வெற்றிபெற்றார்.
டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் ரவுண்ட் 1 பிரிவில் 16வது போட்டியில் இந்தியா-நேபாளம் மோதின. இப்போட்டியில் நேபாளத்தை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்திய ஜோடி ராம்குமார் ராமநாதன், சாய் சகித் வெற்றிபெற்றனர்.
நீச்சல் போட்டியில் பெண்கள் 4x100 மீட்டர் பிரீ ஸ்டைல் ரிலே (குழு) பிரிவில் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி 7ம் இடம் பிடித்தது. இதன் மூலம் பதக்க வாய்ப்பு உள்ள இறுதி சுற்றுக்கு இந்திய அணி நுழைந்துள்ளது.
நீச்சல் போட்டியில் ஆண்கள் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் இன்று நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 2ம் இடம் பிடித்தார். இதன் மூலம் இன்று இரவு நடைபெறும் பதக்க சுற்று போட்டிக்கு நடராஜ் முன்னேறியுள்ளார்.
குத்துச்சண்டை பெண்கள் 45-50 கிலோ எடை பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் வெற்றிபெற்றார். வியட்நாம் வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ரக்பி செவன்ஸ்: குரூப் சுற்றின் 16வது போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஜப்பான் 45-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இ-ஸ்போர்ட்ஸ் எப் சி ஆன்லைன் லூசர்ஸ் பிரகெட் ரவுண்ட் 1 போட்டி 3ல் இந்திய வீரர் சரண் ஜித் சிங் வெற்றிபெற்றார். இதே பிரிவில் ரவுண்ட் 1 போட்டி 7ல் இந்திய வீரர் சரண் ஜித் சிங் வெற்றிபெற்றார்.
இ-ஸ்போர்ட்ஸ் எப் சி ஆன்லைன் ரவுண்ட் ஆப் 32 போட்டி 14ல் இந்திய வீரர் தோல்வியடைந்தார்.
ஆசிய விளையாட்டு இ-ஸ்போர்ட்ஸ் எப் சி ஆன்லைன் ரவுண்ட் ஆப் 32 போட்டி 5ல் இந்திய வீரர் சரண் ஜித் சிங் தோல்வியடைந்தார்.