ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
வாள் வீச்சு விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியர்கள் யாரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அதேவேளை பெண்கள் வாள் வீச்சு போட்டியில் இபெ ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தனிக்ஷா ஹாத்ரி தோல்வியடைந்தார்.
கால்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் குரூப் பி சுற்றின் 7வது போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதின. இதில், இந்தியாவை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தாய்லாந்து வெற்றிபெற்றது. கடைசி வரை போராடிய இந்திய அணி தோல்வியடைந்தது.
பெண்கள் கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது இலங்கை
ஆண்கள் கைப்பந்து போட்டி: ஜப்பானிடம் 3-0 என்ற செட் கணக்கில் தோற்றது இந்தியா.
ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023: சீனா 11 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் ஆகிய மொத்தம் 13 பதக்கங்களுடன் முதல் இடம் வகிக்கிறது. ஹாங்காங் 1 தங்கத்துடன் இரண்டாவது இடம் வகிக்கிறது. இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலத்துடன் 3 இடம் வகிக்கிறது.
ஆண்கள் கைப்பந்து போட்டி: ஜப்பானிடம் இரண்டாவது செட்டை 18-25 என்ற கணக்கில் இழந்தது இந்தியா.
டேபிள் டென்னிஸ்: ஆண்கள் பிரிவில் கஜகஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது.
ஆண்கள் கைப்பந்து போட்டி: ஜப்பானிடம் முதல் செட்டை 16-25 என்ற கணக்கில் இழந்தது இந்தியா.
குத்துச்சண்டை: 54 கிலோ பிரிவு தொடக்கப் போட்டியில் RSC (Referee Stops Contest) மூலம் ஜோர்டானிய வீராங்கனையை 0-0 என்ற கணக்கில் ப்ரீத்தி தோற்கடித்தார்.
பெண்கள் ரக்பி செவன்ஸ்: இந்தியா தனது முதல் குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் ஹாங்காங்கிடம் 0-38 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.