விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-09-24 05:26 GMT

டென்னிஸ் ஆண்கள் அணியில் சுமித் நாகல் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

2023-09-24 05:25 GMT

டேபிள் டென்னிஸ் பெண்கள் அணியில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தாய்லாந்திடம் தோல்வியை தழுவியது.

2023-09-24 05:15 GMT

ஆண்கள் ஆக்கி: இந்தியா தனது முதல் குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 16-0 என்ற கணக்கில் வீழ்த்தி களமிறங்கியது.

2023-09-24 04:58 GMT

டேபிள் டென்னிஸ் பெண்கள் அணியில் அய்ஹிகா முகர்ஜி 2-3 என போராடி தோல்வியடைந்தார். இதனால் இந்தியா- தாய்லாந்து அணிகள் 2-2 என சமநிலையில் உள்ளது.

2023-09-24 04:18 GMT

ஆண்கள் ஆக்கி: முதல் பாதி நேர ஆட்ட முடிவில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 7-0 என முன்னிலையில் உள்ளது.

2023-09-24 04:14 GMT

துப்பாக்கி சுடுதல் (10 மீட்டர் ஏர் ரைபிள்) போட்டியில் ரமிதா 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றார்.


2023-09-24 04:10 GMT

டேபிள் டென்னிஸ் பெண்கள் அணியில் சுதிர்தா முகர்ஜி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது.

2023-09-24 03:47 GMT

ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் (நீச்சல்) போட்டியில் ஸ்ரீஹரி நட்ராஜ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

2023-09-24 03:42 GMT

துடுப்பு படகு போட்டி: ஆண்களுக்கான பிரிவு 8 போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம்.

2023-09-24 03:33 GMT

ஆண்கள் ஹாக்கி: இந்தியா- உஸ்பெகிஸ்தான் போட்டியில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை.

Tags:    

Similar News