விளையாட்டு

வீழ்த்தியதால் வெறி..! அமெரிக்க கிராண்ட் மாஸ்டரின் செயலால் அதிர்ச்சி அடைந்த குகேஷ்

Published On 2025-10-05 22:16 IST   |   Update On 2025-10-05 22:16:00 IST
  • அமெரிக்க அணி 5-0 என்ற கணக்கில் இந்தியா அணியை வீழ்த்தியது.
  • ரசிகர்ளை பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்த அமெரிக்க கிராண்ட் மாஸ்டர்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் செக்மேட் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை டெக்சாஸின் ஆர்லிங்டனில் நடைபெற்ற இப்போட்டியல் இந்தியா- அமெரிக்கா மோதியது.

இதில், அமெரிக்க அணி 5-0 என்ற கணக்கில் இந்தியா அணியை வீழ்த்தியது. 

நேற்றைய கடைசி ஆட்டத்தில், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுரா, இந்திய கிராண்ட் மாஸ்டரான உலக சாம்பியன் குகேஷ் டோமராஜுவை தோற்கடித்தார்.

இதையடுத்து, ஹிகாரு நாகமுரா, குகேஷின் கையில் இருந்த KING-ஐ பிடிங்கி அங்கிருந்த கூட்டத்தின் மீது விசிறியடித்தார். பின்னர், ரசிகர்ளை பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்தார்.

அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நாகமுரா ஹிகாருவின் செயலை கண்டு குகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

Tags:    

Similar News