UEFA சாம்பியன்ஸ் லீக்: டோட்டன்ஹாமை 5-2 என வீழ்த்தியது அட்லெடிகோ மாட்ரிட்
- ஜூலியன் அல்வாரஸ் இரண்டு கோல்கள் அடித்தார்.
- மார்கோஸ் லோரென்ட், கிரிஸ்மான் ராபின் லி ரோர்மண்ட் ஆகியோரும் கோல் அடித்தனர்.
UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இது நாக்-அவுட் போட்டி என்பதால் இரு அணிகளுக்கும் சொந்தமான மைதானத்தில் தலா ஒரு முறை போட்டி நடத்தப்படும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து எந்த அணி அதிக கோல் அடித்துள்ளதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இரு அணிகளும் சமமான கோல் அடித்தார், பெனால்டி சூட்அவுட் கடைபிடிக்கப்படும்.
இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் அட்லெடிகோ மாட்ரிட்- டோட்டன்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் அட்லெடிகோ மாட்ரிட் 5-2 என அபாரமாக வெற்றி பெற்றது. அட்லெடிக் மாட்ரிட் அணியின் மார்கோஸ் லோரென்ட், கிரிஸ்மான், ஜூலியன் அல்வாரஸ் (இரண்டு கோல்), ராபின் லி ரோர்மண்ட் ஆகியோர் கோல் அடித்தனர். டோட்டன்ஹாம் அணியில் பெட்ரோ போர்ரோ, டொமினிக் சோலாங்கே ஆகியோர் கோல் அடித்தனர்.
வருகிற 19-ந்தேதி டோட்டன்ஹாம் அணிக்கு சொந்தமான மைதானத்தில் 2-வது லெக் நடைபெறுகிறது. இதில் 4 கோல்கள் வித்தியாசத்தில டோட்டன்ஹாம் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு முன்னேறும். குறைந்தபட்சமாக 3 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், போனால்டி சூட்அவுட் கடைபிடிக்கப்படும்.
பேயர்ன் 6-1 என அட்லாண்டா BC அணியை வீழ்த்தியது. லிவர்பூல் அணியை கலாட்டாசராய் 1-0 என வீழ்த்தியது. பார்சிலோனா- நியூகேஸ்டில் இடையிலான போட்டி 1-1 என டிராவில் முடிவடைந்தது.