ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி பிப்ரவரி 14-ந்தேதி தொடக்கம்- விளையாட்டுத்துறை மந்திரி அறிவிப்பு
- அணி நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- போட்டி தொடர்பாக சில மாதங்களாக நீடித்த குழப்பம் ஒரு வழியாக இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியை செப்டம்பர் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் போட்டியை நடத்தும் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்துக்கும், இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கும் இடையே ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் உடன்பாடு ஏற்படாததால் ஐ.எஸ்.எல். போட்டியை நிறுத்தி வைப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து பிரச்சனையை தீர்க்க மத்திய விளையாட்டு அமைச்சகம் தலையிட்டது. அணி நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போட்டி தொடர்பாக சில மாதங்களாக நீடித்த குழப்பம் ஒரு வழியாக இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதன்படி 2025-26-ம் ஆண்டுக்கான ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந்தேதி தொடங்கும் என்றும், இதில் மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் உள்பட 14 கிளப் அணிகளும் பங்கேற்கும் என்றும் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார்.