VIDEO: ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம்- கார்ல்சனை வீழ்த்திய இந்திய வீரர் எரிகைசி
- ரவுண்ட்-ராபின் ஸ்டேஜின் 5-வது சுற்று ஆட்டத்தில் அர்ஜுன் எரிகைசி, மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
- இந்த வெற்றியால் அர்ஜுன், போட்டியின் குரூப் ஸ்டேஜில் 4.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் பைனல் 2025 போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்த
போட்டியின் ரவுண்ட்-ராபின் ஸ்டேஜின் 5-வது சுற்று ஆட்டத்தில் இந்திய செஸ் வீரர் அர்ஜுன் எரிகைசி, உலகின் முன்னணி வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் எரிகைசி வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் அர்ஜுன், போட்டியின் குரூப் ஸ்டேஜில் 4.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். கார்ல்சனும் 4.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
உஸ்பெகிஸ்தானின் நொதிர்பெக் சிந்தரோவ் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லெவன் அரோனியன் 5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். போட்டியின் அடுத்த கட்டங்கள் நாக்அவுட் சுற்றுகளாக தொடரும். அர்ஜுன் காலிறுதி ஆட்டத்தில் கீமருடன் மோதவுள்ளார்.
இந்த வெற்றி அர்ஜுனின் செஸ் வாழ்க்கையில் ஒரு முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் கார்ல்சன் போன்ற அனுபவமிக்க வீரரை ஃப்ரீஸ்டைல் செஸ் போன்ற வடிவத்தில் வீழ்த்தியது சிறப்பு வாய்ந்தது.