கிரிக்கெட் (Cricket)

பி.சி.சி.ஐ-க்கு ரூ.2,079 கோடி: ஐ.சி.சி வருவாய் பகிர்வில் இந்தியா முதலிடம்

Published On 2026-02-15 16:44 IST   |   Update On 2026-02-15 16:44:00 IST
  • ஐ.சி.சி.யின் வருவாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கு 5.75 சதவீதம் ஆகும்.
  • வருவாயை கருத்தில் கொண்டு இரு அணிகளும் நிதி நிலைப்பாட்டில் பயன் அடைகிறது.

உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) உள்ளது.

ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வருவாயின் பெரும் பங்கு பி.சி.சி.ஐ. மூலமே கிடைக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் வணிக மதிப்பு ரூ.1800 கோடி முதல் ரூ.2200 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய வருமானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 70 சதவீதத்துக்கும் மேலாக கிடைக்கிறது. 2024 முதல் 2027 வரையிலான கால கட்டத்தில் ஐ.சி.சி.யின் வருவாயில் 38.5 சதவீதம் பி.சி.சி.ஐ.க்கு கிடைக்கிறது. தோராயமாக ரூ.2079 கோடி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கிறது.

ஐ.சி.சி.யின் வருவாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கு 5.75 சதவீதம் ஆகும். அதாவது அவர்கள் ரூ.310 கோடி சம்பாதிக்கிறார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியில்தான் அதிக அளவில் வருவாய் குவிகிறது. வருவாயை கருத்தில் கொண்டு இரு அணிகளும் நிதி நிலைப்பாட்டில் பயன் அடைகிறது.

Tags:    

Similar News