கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை 2026: நமீபியா அணிக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது அமெரிக்கா

Published On 2026-02-15 16:35 IST   |   Update On 2026-02-15 16:35:00 IST
  • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சய் 68 ரன்கள் விளாசினார்.
  • விலெம் மைபர்க், கெர்ஹட் எராஸ்மஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில் நமீபியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அமெரிக்க அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் மொனக் படேல் மற்றும் ஷயன் ஜஹாங்கிர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய மொனக் அரைசதம் கடந்தார். இவர் 30 பந்துகளில் 52 ரன்கள் (3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) அடித்து அவுட் ஆக, ஷயன் 18 பந்துகளில் 22 ரன்கள் (2 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாய்தேஜா 17 ரன்கள் (2 பவுண்டரிகள்) அடித்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். பின்னர் களமிறங்கிய சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மிலிந்த் குமார் பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

போட்டி முடிவில் அமெரிக்கா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்களை குவித்துள்ளது. அமெரிக்கா சார்பில் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சய் 33 பந்துகளில் 68 ரன்கள் (4 பவுண்டரிகள், 6சிக்சர்கள் ) விளாசினார். நமீபியா சார்பில் விலெம் மைபர்க், கெர்ஹட் எராஸ்மஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Tags:    

Similar News