விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியா அசத்தல்: முதல் தங்கம் வென்றார் தீபா கர்மாகர்

Published On 2024-05-26 15:06 GMT   |   Update On 2024-05-26 15:06 GMT
  • உஸ்பெகிஸ்தானில் ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.
  • இதில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கம் வென்றார்.

தாஷ்கண்ட்:

உஸ்பெகிஸ்தானில் ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் பங்கேற்றார்.

தீபா கர்மாகர் வால்ட் பிரிவில் 13.566 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். தென் கொரியா வெள்ளிப்பதக்கம் வென்றது.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News