கடைசி போட்டியில் பதட்டமாக இருந்தேன்... ரோகித் கூறிய அந்த வார்த்தை- ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி
- முதல் 2 போட்டிகளிலும் ரன்கள் எடுக்காததால் கடைசி ஒருநாள் போட்டியில் பதட்டமாக இருந்தேன்.
- நான் எப்படி விளையாடலாம், என்ன செய்ய வேண்டும் என்று ரோகித் என்னிடம் விளக்கிக்கொண்டே இருந்தார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் பெரிய அளவில் விளையாடாத தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய தொடங்கிய போது பதட்டமாக இருந்ததாகவும் ரோகித் அடிக்கடி என்னிடம் பேசி விளக்கி கொண்டே இருந்ததாக ஜெய்ஸ்வால் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த இரண்டு போட்டிகளிலும் ரன்கள் எடுக்காததால் கடைசி ஒருநாள் போட்டியில் நான் பேட்டிங் செய்ய தொடங்கியபோது, பதட்டமாக இருந்தேன். அந்த இன்னிங்சில், நான் எப்படி விளையாடலாம், என்ன செய்ய வேண்டும் என்று ரோகித் என்னிடம் விளக்கிக்கொண்டே இருந்தார்.
நிறைய டாட் பந்துகளை ஆடியதால் அழுத்தத்தில் இருந்தேன், மேலும் ஒரு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டியிருந்தது. அப்போது ரோகித் என்னிடம், 'நீ நிதானமாக விளையாடு, நான் ரிஸ்க் எடுக்கிறேன்' என்று சொன்னார். நான் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதற்காக, அவரே பெரும்பாலான ரிஸ்க்குகளை எடுத்துக்கொண்டார்.
என ஜெய்ஸ்வால் கூறினார்.