கிரிக்கெட் (Cricket)
தோனி போல சிக்ஸ் அடிக்கணும் - நேபாள் வீரரின் ஜாலி பதில்
- இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்தது.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 4 ரன்னில் வெற்றி பெற்றது.
மும்பை:
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 2 முறை சாம்பியனான இங்கிலாந்து கத்துக்குட்டி அணியான நேபாளத்திடம் கடும் போராட்டத்துக்கு பிறகே வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய நேபாளம் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 4 ரன்னில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 4 ரன்களில் தோற்ற பின், 'இப்போட்டியில் இருந்து என்ன பாடம் கற்றீர்கள்?' என்ற கேள்விக்கு நேபாள் வீரர் நந்தன் யாதவ், மகேந்திர சிங் தோனி போல சில சிக்ஸர்கள் விளாச வேண்டும் என்பதே நாங்கள் கற்ற பாடம் என ஜாலியாக பதில் அளித்துள்ளார்.