கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய பவுமா: கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்

Published On 2025-06-20 21:21 IST   |   Update On 2025-06-20 21:21:00 IST
  • தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
  • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி சமீபத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூன் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, கோடி யூசுஃப், டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் உள்ளிட்ட அறிமுக வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், ஐடன் மார்க்ரம், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்தனர்.

இந்நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளார்.

அவர் விலகியுள்ள நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News