கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா வெற்றி பெறவேண்டி பொதுமக்கள் பிரார்த்தனை

Published On 2025-11-02 12:09 IST   |   Update On 2025-11-02 12:09:00 IST
  • இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன
  • முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறவேண்டி பெங்களூருவில் மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

மேலும், உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரிலும் இந்திய அணியின் வெற்றிக்காக மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

Tags:    

Similar News