கிரிக்கெட் (Cricket)

143 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் - 99 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா

Published On 2025-07-14 10:50 IST   |   Update On 2025-07-14 10:50:00 IST
  • முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது.
  • 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் போலாண்ட் 3 விக்கெட்டுகளும் கம்மின்ஸ், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.

ஆஸ்திரேலியா 181 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 4 விக்கெட் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் சரிந்தன.

Tags:    

Similar News