கிரிக்கெட் (Cricket)

சச்சின் சாதனை முறியடிப்பு.. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரலாறு படைத்த விராட் கோலி

Published On 2025-11-30 21:29 IST   |   Update On 2025-11-30 21:29:00 IST
  • ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
  • 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.

இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.

அடுத்தடுத்து வந்த கெய்க்வாட் 8 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும் வெளியேறினர். மறுமுனையில் விராட் கோலி நிலைத்து நின்று ஆடினார்.

அடுத்தாதாக கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார்.

எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது. தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.

கடைசியாக 60 ரன்களில் கே.எல்.ராகுல் மற்றும் அவருடன் கோடி சேர்ந்த ஜடேஜா 32 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகினார்.

எனவே மொத்தம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.

விராட் கோலி இன்று அடித்த சதத்துடன் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

முன்னதாக சச்சின் மற்றும் டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தலா 5 சதங்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது அதனை விராட் கோலி முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். 

Tags:    

Similar News