IPL தொடரை விட்டுவிட்டு PSL தொடரை ரசிப்பார்கள்- பாக், வீரர் ஹசன் அலி சொன்ன காரணம்
- பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் வரும் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்குகிறது.
- ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை பொழுதுபோக்குடன் எங்கே விளையாட்டினாலும் அதை பார்ப்பார்கள்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாங்கள் சிறப்பாக விளையாடினால் அனைத்து ரசிகர்களும் ஐபிஎல் தொடரை விட்டு விட்டு பிஎஸ்எல் தொடரை பார்க்க வந்து விடுவார்கள் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை பொழுதுபோக்குடன் எங்கே விளையாட்டினாலும் அதை பார்ப்பார்கள். அந்த வகையில் பிஎஸ்எல் தொடரில் நாங்கள் நன்றாக விளையாடினால் பார்வையாளர்கள் ஐபிஎல் தொடரை விட்டு விட்டு எங்களைப் பார்ப்பார்கள். அதே சமயம் தேசிய அணி நன்றாக செயல்படாத போது அது பிஎஸ்எல் போன்ற உள்ளூர் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனால் பாகிஸ்தான் நன்றாக செயல்படும் போது பிஎஸ்எல் தொடரின் மவுசும் ஏற்றத்தை நோக்கிச் செல்லும். தற்போது பாகிஸ்தான் அணியின் முடிவுகள் சிறப்பாக இல்லை. இருப்பினும் அணியில் நிறைய புது முகங்கள் இருக்கின்றனர். எனவே அணி நிர்வாகத்திற்கும் கொஞ்சம் நேரம் தேவை. எது தவறாக சென்றது எங்கே தவறு நடந்தது என்பதை அறிந்து வீரர்கள் முன்னேறுவார்கள்.
என்று கூறினார்.
பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் வரும் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.