கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: டிக்கெட் விலை இவ்வளவு கம்மியா?

Published On 2025-09-05 15:32 IST   |   Update On 2025-09-05 15:32:00 IST
  • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்​கு​கிறது.
  • இந்த தொடருக்​கான மொத்த பரிசுத் தொகை ரூ.122.50 கோடி​யாக அறிவிக்​கப்​பட்டுள்ளது.

புதுடெல்லி:

ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது.

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.122.50 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.39.95 கோடி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவில் நடைபெறும் லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட் விலையை ஐசிசி அறிவித்துள்ளது.

முதல் கட்ட விற்பனையில் டிக்கெட்டின் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினமே டிக்கெட்களை பெற விரும்பும் ரசிகர்கள் பதிவுசெய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News