கிரிக்கெட் (Cricket)

வெளியில் இருந்து வரும் கருத்துகள் குறித்து சிந்திக்க வேண்டாம்- கில்லுக்கு சச்சின் அறிவுரை

Published On 2025-06-19 19:58 IST   |   Update On 2025-06-19 19:58:00 IST
  • சுப்மன் கில் இதனை செய்ய வேண்டும், அதனை செய்ய வேண்டும் என பல்வேறு கருத்துகள் வரகிறது.
  • இந்த விஷயங்கள் அனைத்தும் சுப்மன் கில்லின் கவனத்தை சிதறடிக்க வாய்ப்பிருக்கிறது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது.

இந்நிலையில் சுப்மன் கில் வெளியில் இருந்து வரும் கருத்துகள் குறித்து சிந்திக்காமல், ஆட்டம் குறித்தும் அணியின் திட்டங்கள் குறித்தும் மட்டுமே சிந்திக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது: சுப்மன் கில்லுக்கு நேரம் வழங்க வேண்டும் என நினைக்கிறேன். அவருக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும். சுப்மன் கில் இதனை செய்ய வேண்டும், அதனை செய்ய வேண்டும் என பல்வேறு கருத்துகள் வரப்போவதை என்னால் உணர முடிகிறது.

இந்த விஷயங்கள் அனைத்தும் சுப்மன் கில்லின் கவனத்தை சிதறடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், சுப்மன் கில் வெளியில் இருந்து வரும் கருத்துகள் குறித்து சிந்திக்காமல், ஆட்டம் குறித்தும் அணியின் திட்டங்கள் குறித்தும் மட்டுமே சிந்திக்க வேண்டும். அணியின் நலனை கருத்தில் கொண்டு சுப்மன் கில் அவரது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

என்று சச்சின் கூறினார். 

Tags:    

Similar News