null
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு
- சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை கேப்டனாக சுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது உடல்தகுதியை பொறுத்து போட்டிகளில் விளையாடுவது முடிவு செய்யப்படும் என பிசிசிஐ கூறியுள்ளது
இந்திய அணி விவரம்:-
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (WK), சஞ்சு சாம்சன் (WK), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர்.