கிரிக்கெட் (Cricket)
சூர்யகுமார் யாதவ்க்கு அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக புகைப்படம் வெளியிட்டு பதிவு
- சூர்யகுமார் யாதவ் லண்டனில் உள்ள மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.
- அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்பு தான் நலமுடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
34 வயதான சூர்யகுமார் யாதவ் லண்டனில் உள்ள மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்பு தான் நலமுடன் உள்ளதாக சூர்ய குமார் யாதவ் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 மாத காலத்திற்கு டி20 கிரிக்கெட் இல்லாததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் 3 மாத காலம் ஓய்வெடுக்க உள்ளார்.