கிரிக்கெட் (Cricket)

டெஸ்டில் அதிக சதங்கள்: ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்த ஸ்மித்

Published On 2026-01-06 21:29 IST   |   Update On 2026-01-06 21:29:00 IST
  • மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 518 ரன்களை குவித்தது.
  • டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 129 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

சிட்னி:

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 97.3 ஓவரில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்தார். ஹாரி புரூக் 84 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி பொறுப்புடன் விளையாடியது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 518 ரன்களை குவித்து 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து 129 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தோர் பட்டியலில் ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 36 சதங்களுடன் இருந்தனர்.

இந்நிலையில், சிட்னி டெஸ்டில் சதமடித்துள்ள ஸ்டீவன் ஸ்மித் 37 சதங்களுடன் இந்தியாவின் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளினார்.

இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (51), ஜாக் காலிஸ் (45), ரிக்கி பாண்டிங் (41), ஜோ ரூட் (41), குமார் சங்ககரா (38) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

Tags:    

Similar News